/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜயேந்திரர் ஆராதனை மகோத்சவம் காஞ்சி விஜயேந்திரர் புஷ்பாஞ்சலி
/
ஜயேந்திரர் ஆராதனை மகோத்சவம் காஞ்சி விஜயேந்திரர் புஷ்பாஞ்சலி
ஜயேந்திரர் ஆராதனை மகோத்சவம் காஞ்சி விஜயேந்திரர் புஷ்பாஞ்சலி
ஜயேந்திரர் ஆராதனை மகோத்சவம் காஞ்சி விஜயேந்திரர் புஷ்பாஞ்சலி
ADDED : மார் 11, 2025 10:57 PM

காஞ்சிபுரம்:காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி, சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஏழாவது வார்ஷிக ஆராதனை மகோத்சவம், சங்கர மடத்தில் கடந்த 9ம் தேதி துவங்கியது.
இரண்டாம் நாளான நேற்று முன்தினம், காஞ்சி காமகோடி பீடத்தின் சமய, சமுதாய, கலை, கலாசார பண்பாண்டு சேவை அமைப்பான, இந்து சமய மன்றம் மற்றும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், காஞ்சிபுரம் நாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து கருத்தரங்கம், நுால் வெளியீட்டு விழா, சமுதாய பணியாற்றி வரும் சேவை அமைப்புகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் விருது வழங்கும் விழா நடந்தது.
காஞ்சி விஜயேந்திரர் பேசியதாவது:
ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெய்வத்தமிழ் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட உள்ளது. இந்த அறக்கட்டளை வாயிலாக சங்கரா கல்லுாரியில் தமிழ் துறையில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நடைபெற இருக்கும் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி விழாவில் இந்த அறக்கட்டளை முறையாக செயல்படும். பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், சங்கரா கல்லுாரி தலைவர் ராமச்சந்திரன், முதல்வர் கலை ராம வெங்கடேசன், மும்பை தொழிலதிபர் சங்கர் உள்ளிட்டோரும், 20க்கும் மேற்ப்பட்ட சமய சமுதாய தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
ஜயேந்திரரின் வார்ஷிக ஆராதனை மஹோத்சவ தினமான நேற்று, காலை 7:00 மணிக்கு, ருத்ர பாராயணம், ஹோமம், மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹூதியும், தொடர்ந்து சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை, சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது.
இதில், மஹா சுவாமிகள் மற்றும் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், காஞ்சி விஜயேந்திரர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
காலை 9:00 மணியில் இருந்து, பஞ்சரத்ன கீர்த்தனை, கோஷ்டி கான நாத சமர்ப்பணம் உள்ளிட்டவை நடந்தது.
வார்ஷிக ஆராதனை மஹோத்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.