/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சிமென்ட் சிலாப் உடைந்து திறந்திருக்கும் மழைநீர் கால்வாய்

ADDED : ஆக 01, 2024 01:09 AM

சிமென்ட் சிலாப் உடைந்து திறந்திருக்கும் மழைநீர் கால்வாய்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் தெற்கு மாட வீதியில், மழைநீர், மின்சாரம், தொலைபேசி கேபிள் செல்ல வசதியாக கால்வாய் அமைக்கப்பட்டு, அதன் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடைபாதைக்கு அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் கற்கள் சரிந்து விழுந்துள்ளன. மேலும், கால்வாய் மீது மூடப்பட்ட சிமென்ட் சிலாப் உடைந்துள்ளதால், நடைபாதையின் கீழ் பகுதியில் உள்ள கால்வாய் திறந்து கிடக்கிறது.
இரவு நேரத்தில் நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, திறந்து கிடக்கும் நடைபாதை கால்வாயின் மீது சிமென்ட் சிலாப் போட்டு மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.ராஜா, காஞ்சிபுரம்.
வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் குடிநீர் வசதி வேண்டும்
உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில் பரிகார ஸ்தலமான வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, சோமவாரம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் உள்ளூரில் இருந்தும், வெளியூரில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வியாழக்கிழமை குரு பகவான் தட்சிணாமூர்த்திக்கு பரிகார பூஜை செய்ய அதிகளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இக்கோவிலில், குடிநீர் வசதி கிடையாது. எனவே, வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
- தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.