/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டாஸ்மாக் கடைகளே இல்லாத காஞ்சி நகரம் பெண்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி
/
டாஸ்மாக் கடைகளே இல்லாத காஞ்சி நகரம் பெண்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி
டாஸ்மாக் கடைகளே இல்லாத காஞ்சி நகரம் பெண்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி
டாஸ்மாக் கடைகளே இல்லாத காஞ்சி நகரம் பெண்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : மார் 06, 2025 08:01 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையிலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு காரணமாகவும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டன.
குறிப்பாக, விஷ்ணு நகர், ஜெம் நகர், மேட்டுத்தெரு, நெல்லுக்காரத்தெரு, ராஜாஜி மார்க்கெட், சந்தைவெளி அம்மன் கோவில் அருகே, செங்ககழு நீரோடை வீதி என நகரின் முக்கிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் இருந்தன.
நகரவாசிகளுக்கு பெரும் தொந்தரவாக இருந்த இந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என, பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், போதிய நடவடிக்கை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், சந்தைவெளி அம்மன் கோவில் அருகே இருந்த டாஸ்மாக் கடை 2022ல் மூடப்பட்டது. அடுத்ததாக மேட்டுத்தெரு, நெல்லுக்காரத்தெரு ஆகிய கடைகளும், விஷ்ணு நகர், ஜெம் நகர் ஆகிய கடைகளும் சமீபத்தில் மூடப்பட்டன.
அடுத்ததாக ராஜாஜி மார்க்கெட் அருகில் இருந்த கடையும், மார்க்கெட் திறந்ததால், வியாபாரிகளுக்கு தொந்தரவாக இருந்த காரணத்தால், அந்த கடையும் மூடப்பபட்டது.
இந்த கடைகள் மூடப்பட்டதால், காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியது. இதனால், அப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் அன்றாடம் ஏற்பட்டது.
இந்த கடையால் மதுபிரியர்களிடையே அடிதடி, தகராறு போன்ற பிரச்னைகள் ஏற்கபடுவதால், இக்கடையை மூட, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து செங்கழுநீரோடை வீதி டாஸ்மாக் கடையும் மூன்று நாட்கள் முன்பாக மூடப்பட்டன.
இதனால், காஞ்சிபுரம் நகரில் இயங்கி வந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருப்பது நகரவாசிகளுக்கும், பெண்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் நகரில், சில மதுபான கூடங்களும், எலைட் வகையிலான கடை மட்டுமே செயல்படுகின்றன. சில்லறை ரீதியிலான டாஸ்மாக் கடைகளே, காஞ்சிபுரம் நகரில் இல்லை.
மதுபிரியர்கள், மதுபானம் வாங்க, செவிலிமேடு, வையாவூர், குண்டுகுளம் போன்ற இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு நகரிலிருந்து வெளியே சென்றுதான் வாங்க வேண்டும். இதனால், நகரவாசிகள், பெண்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.