/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி குப்பை கிடங்கில் தீ புகை மண்டலத்தால் பகுதியினர் அவதி
/
காஞ்சி குப்பை கிடங்கில் தீ புகை மண்டலத்தால் பகுதியினர் அவதி
காஞ்சி குப்பை கிடங்கில் தீ புகை மண்டலத்தால் பகுதியினர் அவதி
காஞ்சி குப்பை கிடங்கில் தீ புகை மண்டலத்தால் பகுதியினர் அவதி
ADDED : ஏப் 12, 2024 10:35 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், திருவீதிபள்ளம் அருகில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அப்பகுதியில் மலைபோல் குவிந்திருக்கும் குப்பை சில நாட்களுக்கு முன் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால், திருவீதிபள்ளத்தை சுற்றியுள்ள அரிஹந்த் அவென்யூ, திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதி முழுதும் புகை மண்டலமாக காணப்படுகிறது.
இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவததோடு, அப்பகுதியினருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் வசிப்போருக்கு சுவாச கோளாறு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை முற்றிலும் அணைக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி, நகர் நல அலுவலர் அருள்மொழி கூறியதாவது:
கோடை காலத்தில் குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பிடிக்கிறது. ஏற்கெனவே தீப்பிடித்ததை தீயணைப்பு துறை வாயிலாக அணைத்துள்ளோம்.
மீண்டும் தீப்பிடித்து இருந்தால் அதை அணைக்கவும், தீப்பிடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

