/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் ஒன்றரை மாதங்களில் 178 சதவீதம் அதிக மழை பதிவு
/
காஞ்சியில் ஒன்றரை மாதங்களில் 178 சதவீதம் அதிக மழை பதிவு
காஞ்சியில் ஒன்றரை மாதங்களில் 178 சதவீதம் அதிக மழை பதிவு
காஞ்சியில் ஒன்றரை மாதங்களில் 178 சதவீதம் அதிக மழை பதிவு
ADDED : ஜூலை 14, 2024 03:29 PM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்வது வழக்கம். அடுத்தபடியாக, தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்யும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய ஐந்து தாலுகாவிலும் பதிவாகும் மழையளவு சராசரி கணக்கிட்டு, மழையின் அளவு கணக்கீடு செய்யப்படுகிறது.
அந்த வகையில், தென்மேற்கு பருவமழை துவங்கிய கடந்த ஜூன் மாதம் முதல், ஜூலை 13ம் தேதி வரை கணக்கீடு செய்ததில், 11.1 செ.மீ., மழை சராசரியாக பெய்திருக்க வேண்டும். ஆனால், 178 சதவீதம் அதிகமாக, 31.0 செ.மீ., மழை பதிவாகியிருப்பதாக, மத்திய அரசின் வானிலை ஆய்வு மைய இணையதளம் தெரிவித்துள்ளது.