/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 2.8 செ.மீ., மழை பதிவு
/
காஞ்சியில் 2.8 செ.மீ., மழை பதிவு
ADDED : செப் 09, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில், சில நாட்களாகவே இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
பகலில் கடுமையான வெயில் இருந்தாலும், இரவில் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை ஏற்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.
பேரிடர் மேலாண்மை துறை கணக்கெடுப்பில், காஞ்சிபுரத்தில் 2.8 செ.மீ., மழையும், உத்திரமேரூரில் 0.4 செ.மீ., வாலாஜாபாத்தில் 2.2 செ.மீ., குன்றத்துாரில் 2.7 செ.மீ.,மழையும் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் மிதமான அளவு உள்ள நிலையில், தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக, ஏரி, குளம் போன்றவை மெல்ல நிரம்பி வருகிறது.