/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 3.6 செ.மீ., மழை பதிவு
/
காஞ்சியில் 3.6 செ.மீ., மழை பதிவு
ADDED : ஜூலை 12, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்வதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
அதிகாலை 4:00 மணி வரை விட்டு, விட்டு கனமழை பெய்ததால், அதிகபட்சமாக, காஞ்சிபுரத்தில் 3.6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்தபடியாக, உத்திரமேரூரில் 3.2 செ.மீ., மழையும், ஸ்ரீபெரும்புதுாரில் 2.8 செ.மீ., வாலாஜாபாத் 2.2 செ.மீ., குன்றத்துார் 2.2 செ.மீ.,செம்பரம்பாக்கத்தில் 1.9 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.