/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் - வந்தவாசி -நெடுஞ்சாலை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம்
/
காஞ்சிபுரம் - வந்தவாசி -நெடுஞ்சாலை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம்
காஞ்சிபுரம் - வந்தவாசி -நெடுஞ்சாலை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம்
காஞ்சிபுரம் - வந்தவாசி -நெடுஞ்சாலை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம்
ADDED : மார் 06, 2025 12:43 AM

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், 40 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலையில் மாங்கால் சிப்காட், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட், மறைமலைநகர் சிப்காட் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கம்பெனி பேருந்துகளும் அதிகளவில் சென்று வருகின்றன.
இதனால், இருவழிச் சாலையாக உள்ள காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று வர போதிய இடவசதி இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இதை தடுக்க, இருவழிச் சாலையை. நான்குவழிச் சாலையாக மாற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணியின் முதல் கட்டமாக, மாங்கால் கூட்டுசாலை முதல், மானாம்பதி கூட்டுச்சாலை வரை உள்ள 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழிச் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர்.
அந்த பணிக்காக முதல் கட்டமாக 78.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு விரிவாக்க பணிகள், கடந்த வாரம் துவக்கப்பட்டன. தற்போது, மாங்கால் கூட்டுசாலையில் இருந்து மானாம்பதி கூட்டு சாலை வரையில் மொத்தம் 7 சிறுபாலங்களை விரிவுப்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டு, புதிதாக 6 சிறு பாலங்கள் அமைப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த நான்குவழிச் சாலை விரிவாக்க பணியில், நெடுஞ்சாலையோரத்தில் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியும் நடக்க உள்ளது.