/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குப்பை தொட்டி வேண்டும்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குப்பை தொட்டி வேண்டும்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குப்பை தொட்டி வேண்டும்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குப்பை தொட்டி வேண்டும்
ADDED : மார் 13, 2025 01:34 AM

குப்பை தொட்டி வேண்டும்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பல்வேறு தெருக்களிலும், சாலையில் குப்பை கொட்டுவது தொடர்கதையாக உள்ளது. இதனால், காற்றடிக்கும்போது, சாலை முழுதும் குப்பை பரவுகிறது.
இதனால், சாலையில் நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளில் குப்பை கொட்டுவதற்கு என, குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் குப்பை தொட்டி கவிழ்த்து போடப்பட்டுள்ளதால், பகுதிவாசிகள், சாலையோரத்தில் குப்பை போடுகின்றனர்.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி முழுதும் உள்ள அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டி வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- தி.மோகன்,
காஞ்சிபுரம்.