/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி ;துருப்பிடித்து வீணாகும் மின்விளக்கு கம்பம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி ;துருப்பிடித்து வீணாகும் மின்விளக்கு கம்பம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி ;துருப்பிடித்து வீணாகும் மின்விளக்கு கம்பம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி ;துருப்பிடித்து வீணாகும் மின்விளக்கு கம்பம்
ADDED : ஜூன் 11, 2024 08:51 PM

துருப்பிடித்து வீணாகும் மின்விளக்கு கம்பம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில், முக்கிய சாலை சந்திப்புகளில், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பல இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் தேனம்பாக்கம் ரோடு, கோகுலம் வீதியில், சாலையோரம் போடப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு கம்பம், மண்ணில் புதைந்து துருப்பிடித்து வீணாகி வருகிறது.
இந்த மின்கம்பத்தை, காஞ்சிபுரம் நகரில், போதுமான வெளிச்சம் இல்லாத முக்கிய சந்திப்புகளில் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.
மண்ணில் புதைந்து வரும் வழிகாட்டி பெயர் பலகை
சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து ஓரிக்கை செல்லும் மிலிட்டரி சாலையோரம், விஷ்ணு நகர் உள்ளது. மாநகராட்சி சார்பில், விஷ்ணு நகருக்கு எந்த திசையில் செல்ல வேண்டும் என, சாலையோரம் வழிகாட்டி பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
அப்பகுதியில் புதிதாக சாலை போடப்பட்டதால், வழிகாட்டி பெயர் பலகை மண்ணில் புதைந்து மறைந்து வருகிறது. நாளடையில் வழிகாட்டி பெயர் பலகை முற்றிலும் மண்ணில் புதைந்து மறைந்தவிடும் நிலை உள்ளது.
எனவே, மண்ணில் புதைந்து கிடக்கும் வழிகாட்டி பெயர் பலகையை சரியான உயரத்தில் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார்,
காஞ்சிபுரம்.