
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையோரம் குப்பை எரிப்பு
வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் செல்லும் பிரதான சாலையோரம் அப்பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். குப்பையை மாநகராட்சி நிர்வாகம் முறையாக அகற்றாததால், குப்பையை தீயிட்டு எரிக்கின்றனர். குப்பையில் இருந்து வெளியேறும் புகையால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், சாலையை மறைக்கும் அளவிற்கு புகைமண்டலம் ஏற்படும் போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
மேலும், சுற்றுச்சூழலும் மாசடைகிறது. எனவே, கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையோரம் குவிந்துள்ள குப்பையை அகற்றுவதோடு, அங்கு குப்பை கொட்ட தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன், காஞ்சிபுரம்.