ADDED : ஜூலை 02, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகற்றப்படாத குப்பையால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு அதியமான் நகர், இரட்டை கால்வாய் அருகில், சுற்றியுள்ள பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை முறையாக அகற்றாததால், அப்பகுதியில் குப்பைகுவியலாக உள்ளது.
காற்றில் பறக்கும் குப்பையால், சுகாதார சீர்கேடுஏற்படும் நிலை உள்ளது. மேலும், கால்வாயில் விழும் குப்பையால் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, அதியமான் நகரில், கால்வாய் ஓரம்கொட்டப்படும் குப்பையை முறையாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.