ADDED : செப் 17, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிழற்கூரை இல்லாததால் வெயிலில் காத்திருக்கும் பயணியர்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், உத்திரமேரூர், செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்து நிற்குமிடத்தில் நிழற்கூரை வசதி இல்லை.
இதனால், இவ்வூர்களுக்கு செல்லும் பயணியர் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் வெயில் மற்றும் மழையில் நீண்டநேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், உத்திரமேரூர் செல்லும் பேருந்து நிற்குமிடத்தில், பயணியருக்காக நிழற்கூரை அமைக்க வேண்டும்.
- என்.சிவா, காஞ்சிபுரம்.