/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர் மண்டி கிடக்கும் கூத்திரம்பாக்கம் ஆதித்தியன் குளம்
/
புதர் மண்டி கிடக்கும் கூத்திரம்பாக்கம் ஆதித்தியன் குளம்
புதர் மண்டி கிடக்கும் கூத்திரம்பாக்கம் ஆதித்தியன் குளம்
புதர் மண்டி கிடக்கும் கூத்திரம்பாக்கம் ஆதித்தியன் குளம்
ADDED : செப் 02, 2024 05:50 AM

கூத்திரம்பாக்கம்: காஞ்சிபுரம் அடுத்த, கூத்திரம்பாக்கம் ஊராட்சியில், ஆதித்தியன் குளம் உள்ளது. இந்த குளத்தை, 2021ம் ஆண்டு, 9.61 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து, கற்களை பதித்தனர்.
இந்த குளத்தில் நிரம்பும் நீரால், ஆடு, மாடுகளின் தாகம் தீர்க்க பெரியளவில் உதவி வந்தது. போதிய பராமரிப்பு இன்றி விடப்பட்டதால், குளம் முழுதும் நாணல் புல் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டி கிடக்கின்றன.
இதனால், கூத்திரம்பாக்கம் கிராமத்தில், விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களில், சாலை கடந்து செல்லும் விஷப்பாம்புகள் குளத்தில் இருக்கும் நாணலில் தஞ்மடைந்து விடுகின்றன.
எனவே, கூத்திரம்பாக்கம் ஆதித்தியன் குளத்தை சுற்றிலும் இருக்கும் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் குளத்தின் நடுவில் இருக்கும் நாணலை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.