/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ருத்ரேஸ்வரர் கோவில் 17ல் கும்பாபிஷேகம்
/
ருத்ரேஸ்வரர் கோவில் 17ல் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 12, 2024 10:47 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், மாதனம்பாளையம் தெருவில், மாணிக்க விநாயகர் மற்றும் காமாட்சியம்மன் உடனுறைமஹா ருத்ரேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த மாதனம்பாளையம் தெருவினர், இளைஞர்கள் மற்றும் சிவ பக்தர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, கோவிலில் புதிய ராஜகோபுரம், மூலவர்விமானம், மாணிக்க விநாயகர் விமானம், வள்ளி தேவசேனா உடனுறை சுப்ரமணியர், சண்டேஸ்வரர், நவக்கிரஹங்கள், நவக்கிரக தலவிருட்சம், நாகம்மன், சூரியன், பைரவர், நந்தி பகவான் சன்னிதி புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 15ம் தேதி, காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. வரும் 17ம் தேதி காலை 6:30 மணிக்கு வேள்வி சாலையில் இருந்து குடம் புறப்பாடு நடக்கிறது.
காலை 6:40 மணிக்கு மாணிக்க விநாயகர் கோபுர விமானத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடக்கிறது.