/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : செப் 16, 2024 06:36 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில்,பிடாரி சுந்தியம்மன் மற்றும் பொய்யாமொழிவிநாயகர் கோவில், கிராமப்புற திருப்பணிதிட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி மற்றும் மக்கள்பங்களிப்புடன் பல்வேறு திருப்பணிகள்மேற்கொள்ளப்பட்டன.
கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று முன்தினம்காலை 8:30 மணிக்கு திருமுறை விண்ணப்பம்,மஹா கணபதி வேள்வி உள்ளிட்டவைநடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு திருப்பள்ளி யெழுச்சி, இரண்டாம் கால வேள்வி உள்ளிட்டவைநடந்தது. காலை 10:00 மணிக்கு கோபுரத்திற்கும், தொடர்ந்து அம்பிகைக்கும் கும்பாபிஷேகம்நடந்தது. காலை 10:00 மணிக்கு மஹாஅபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
அதேபோல், உத்திரமேரூர் அடுத்த மேல்பாக்கம்கிராமத்தில் வைரவநாதர் கோவில், சம்ஹார பைரவர் உடனுறை சண்டிகாதேவி கோவில்,மாரியம்மன் கோவில் உள்ளது. மூன்றுகோவில்களிலும், பல்வேறு திருப்பணிகள்சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை 10:45 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைதுவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, யாத்ரா தானம், மஹா பூர்ணாஹூதிஉள்ளிட்டவை நடந்தது.
காலை 9:00 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

