/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முனீஸ்வரன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
முனீஸ்வரன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : மார் 23, 2024 12:50 AM
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார்ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூர் கிராமத்தில், ஸ்ரீஜெடா முனீஸ்வரன் கோவில் உள்ளது. 100 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு, காஞ்சிபுரம் மட்டுமல்லாமல்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வந்து செல்வர்.
இந்நிலையில், கடந்தாண்டு கோவில் திருப்பணிகளுக்காக பாலாலயம் செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. பணிகள் முழுமை அடைந்ததை அடுத்து, நாளை காலை 10:00 மணிக்கு அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
நேற்று, மஹா கணபதி ஹோமம், முதல் கால வாஸ்து சாந்தி அஞ்குரார்பணம் கலச ஸ்தாபனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று, விக்னேஷ்வர பூஜை, யாகபூஜை பூர்ணாவூதி இரண்டாம் கால பூஜை நடக்க உள்ளது.
நாளை காலை 9:45 மணிக்கு கடங்கள் புறப்பாடு தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு ஸ்ரீ ஜெடா முனீஸ்வரன் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாஷேகம் நடைபெற உள்ளது.

