/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போலீஸ்காரரை வெட்டிய வாலிபருக்கு 'குண்டாஸ்'
/
போலீஸ்காரரை வெட்டிய வாலிபருக்கு 'குண்டாஸ்'
ADDED : செப் 02, 2024 05:47 AM
நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன், 44; திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில், முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஆக.,14ம் தேதி, அதே கிராமத்தில், கோவில் திருவிழாவில், மது அருந்துவதற்கு, சேதுபதி, 23. பிரதாப், 22. ஆகிய இருவரும், அறிவழகனிடம் பணம் கேட்டு, தர மறுத்ததால், தலை, கழுத்து ஆகிய பகுதியில் கத்தியால் வெட்டி உள்ளனர்.
காயமடைந்த அறிவழகன், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து, நெமிலி போலீசார் சேதுபதி, பிரதாப் ஆகிய இருவரையும் கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.
இதில், சேதுபதியை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, ராணிப்பேட்டை எஸ்.பி., கிரன்ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார். ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா, சேதுபதியை ஒராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.