ADDED : ஜூலை 05, 2024 09:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜீவன் குமார், 45, மற்றும் பிரதாப், 41, இருவர் மீதும், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை என, 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த மாதம் திருட்டு வழக்கு ஒன்றில் இருவரையும் ஸ்ரீபெரும்புதுார் போலீசார் கைது செய்து, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் பரிந்துரையின்படி, கலெக்டர் கலைச்செல்வி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், அதற்கான ஆணையை வேலுார் மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.