/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கே.வி., பள்ளி வில்வித்தை மாணவர்கள் உற்சாகம்....
/
கே.வி., பள்ளி வில்வித்தை மாணவர்கள் உற்சாகம்....
ADDED : ஜூலை 30, 2024 07:08 AM

சென்னை: பி.எம்., ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி சார்பில், 53வது சென்னை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள், மீனம்பாக்கம் கிளை பள்ளி வளாகத்தில், நேற்று காலை துவங்கின.
இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டல அளவிலான பள்ளிகள் பங்கேற்றன.
போட்டியில் 14, 17, 19 வயதினருக்கான வில்வித்தை மற்றும் 17, 19 வயதினருக்கான மல்யுத்தம் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட மூன்று போட்டிகள் மட்டும், மீனம்பாக்கம் கிளையில் நேற்று நடந்தன.
வில்வித்தை போட்டியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.
நேற்று காலை நடந்த முதல் நாள் போட்டியை, மீனம்பாக்கம் பள்ளியின் முதல்வர் விசுவநாதன், ஏ.ஏ.ஐ., விமான நிலைய இயக்குனர் சி.வி.தீபக் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
வித்யாலயா பி.டி.ஏ., தலைவர் கஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். போட்டிகள் தொடர்ந்து, நாளை வரை நடக்கின்றன.