/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாய் வசதி இல்லாததால் தெருவில் ஓடும் கழிவுநீர் தொற்று அபாயம்
/
வடிகால்வாய் வசதி இல்லாததால் தெருவில் ஓடும் கழிவுநீர் தொற்று அபாயம்
வடிகால்வாய் வசதி இல்லாததால் தெருவில் ஓடும் கழிவுநீர் தொற்று அபாயம்
வடிகால்வாய் வசதி இல்லாததால் தெருவில் ஓடும் கழிவுநீர் தொற்று அபாயம்
ADDED : மார் 06, 2025 12:25 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் பண்ருட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள, வடக்கு தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், இப்பகுதியில் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற வடிகால்வாய் வசதி இல்லை.
இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தெருவில் வடிந்து ஓடுகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன், தொற்று நோய் பரவும் அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.
இதனால், குழந்தை வீடுகளை விட்டு வெளியே வந்து விளையாட முடியாத சூழல் உள்ளது. பள்ளி, கல்லுாரிக்கு நடந்து செல்லும் மாணவ -- மாணவர்கள் உள்ளிட்டோர், கழிவுநீரை கடந்து செல்லும் போது முக சுளிப்பு அடைகின்றனர்.
மேலும், வடிகால்வாய் வசதி இல்லாததால், பருவ மழை காலங்களில், மழைநீர் வீடுகளை சூழந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருவதாக அப்பகுதியின் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், கழிவுநீரால் ஏற்படும் சீர்கேட்டை தடுக்கவும், வடக்கு தெரு சாலையின் இரண்டு பக்கமும் வடிகால் வசதி அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.