/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உலக மக்கள் நன்மைக்காக கல்லுாரியில் விளக்கு பூஜை
/
உலக மக்கள் நன்மைக்காக கல்லுாரியில் விளக்கு பூஜை
ADDED : ஆக 09, 2024 10:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாணைப்படி,காஞ்சிபுரம் ஏனாத்துார் ஸ்ரீசங்கரா கலை அறிவியல் கல்லுாரியில் வித்யா சரஸ்வதி அம்மன் கோவிலில் நேற்று திரு விளக்கு பூஜைநடந்தது.
தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பறைசாற்றும் வகையில், உலக மக்கள் நன்மைக்காக நடந்த திருவிளக்குபூஜையில், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவியர், அலுவலக பணியாளர்கள் பங்கேற்று, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர்.
விநாயகர், காமாட்சியம்மன், துர்கா, மஹாலட்சுமி, ஸ்ரீவித்யா சரஸ்வதி அம்மன் மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்துவழிபட்டனர்.

