/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து: வேளாண் அதிகாரி
/
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து: வேளாண் அதிகாரி
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து: வேளாண் அதிகாரி
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து: வேளாண் அதிகாரி
ADDED : மார் 09, 2025 03:14 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக் கடைகளில், 21 லட்சத்து 48,000 கிலோ யூரியா, 4 லட்சத்து 66,000 கிலோ டி.ஏ.பி., 2 லட்சத்து 36,000 கிலோ பொட்டாஷ், 1,259 காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் இருப்பில் உள்ளன.
உர விற்பனையாளர்கள் உரங்களை விற்பனை செய்யும் போது, இணைப்பு பொருட்களை கட்டாயமாக வாங்க வேண்டும். கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இதுபோன்ற செயலில் ஈடுபடும் உரக்கடைகளைகண்டறிந்தால், அந்த கடை மீது இருக்கும் உரிமம் ரத்து செய்யப்படும் என, காஞ்சிபுரம்மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.