/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்நடை கணக்கெடுப்பு தேதி நீட்டிப்பு
/
கால்நடை கணக்கெடுப்பு தேதி நீட்டிப்பு
ADDED : மார் 07, 2025 10:02 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மண்டல கால்நடை துறை கட்டுப்பாட்டில், 21 வது கால்நடை கணக்கெடுப்புஅக்டோபர் மாதம் துவங்கி, பிப்ரவரி மாதம் நிறைவு பெற்று உள்ளது.
அதன்படி, 2 லட்சத்து 56 ஆயிரத்து 868 வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 59,838 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்த வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.
இந்த கண்காணிப்பு பணிகளை சிறப்பு கூடுதல் இயக்குநர்நவநீத கிருஷ்ணன் நேற்று கொட்டவாக்கம், பரந்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆய்வுசெய்தார். கால்நடை வளர்ப்போர் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.
காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குனர் பாஸ்கரன், துணை இயக்குநர் சுந்தரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.