/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்'
/
'உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்'
ADDED : ஜூன் 15, 2024 11:02 PM
காஞ்சிபுரம்:தமிழக அரசின், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டம், கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும், தாலுகா அளவில், மாவட்ட கலெக்டர், ஒரு நாள் முழுதும் ஆய்வு செய்வதும், மக்களிடம் குறைகளை கேட்பதும், மனுக்களை பெறும் நிகழ்வுகள் நடைபெறும்.
கடந்த பிப்ரவரி மாதம், உத்திரமேரூர் தாலுகாவில், கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார். இதையடுத்து, வரும் 26ல், வாலாஜாபாத் தாலுகா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய நாள் முழுதும், வாலாஜாபாத் தாலுகாவில் பல்வேறு இடங்களை, கலெக்டர் ஆய்வு செய்ய உள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், கோரிக்கை மனுக்களை, வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் மக்கள் அளிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.