/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
‛உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஸ்ரீபெரும்புதுார் கலெக்டர் ஆய்வு
/
‛உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஸ்ரீபெரும்புதுார் கலெக்டர் ஆய்வு
‛உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஸ்ரீபெரும்புதுார் கலெக்டர் ஆய்வு
‛உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஸ்ரீபெரும்புதுார் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 22, 2024 01:10 AM

ஸ்ரீபெரும்புதுார்:'உங்களை தேடி; உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், தாலுகா அளவில் தங்கி, அன்றைய தினம் முழுதும் மாவட்ட கலெக்டர் பல்வேறு அரசு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்தார்.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கை பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதன்பின், ஸ்ரீபெரும்புதுார் மகளிர் காவல் நிலையம், அறிஞர் அண்ணா அரசு மருத்துமனை, வேளாண்மை துறை விதை கிடங்கு, வேளாண்மை விரிவாக்க மையம், நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பின், ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மூன்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வங்கி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். தொடர்ந்து, இன்று காலை 9:00 மணி வரை ஆய்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.