/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவாவில் இருந்து கோவைக்கு போலி மது கடத்திய லாரி பறிமுதல்
/
கோவாவில் இருந்து கோவைக்கு போலி மது கடத்திய லாரி பறிமுதல்
கோவாவில் இருந்து கோவைக்கு போலி மது கடத்திய லாரி பறிமுதல்
கோவாவில் இருந்து கோவைக்கு போலி மது கடத்திய லாரி பறிமுதல்
ADDED : மார் 08, 2025 01:25 AM

சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, சேலம் வழியாக திருப்பூருக்கு, கன்டெய்னர் லாரியில், போலி மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக, நேற்று முன்தினம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருப்பூர் மாவட்டம், செடப்பாளையம் பகுதியில், போலீசார் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
விசாரணையில், கோவாவில் இருந்து கோவைக்கு, 2,340 போலி மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. லாரியை பின் தொடர்ந்து, டாடா இண்டிகா காரில் இருவர் வருவதும் தெரிய வந்தது. அந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதிலும், போலி மதுபாட்டில்கள் இருந்தன.
இதையடுத்து, கன்டெய்னர் லாரி ஓட்டுநர் மற்றும் காரில் வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். லாரி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலின் பின்னணியில் உள்ள, முக்கிய புள்ளி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய வேண்டி இருப்பதால், கூட்டாளிகளின் பெயர்களை வெளியிடவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.