ADDED : மார் 30, 2024 09:12 PM
மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த, செல்லம்பட்டிடை காலனி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு, பரந்துார் துணை மின் நிலையத்தில் இருந்து, மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
சில மாதங்களாக, குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
குறிப்பாக, கோடைக்காலம் துவங்கி இருப்பதால், அடிக்கடி குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகமாவதால், மின்சாதனப் பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, செல்லம்பட்டிடை காலனி கிராமத்திற்கு, சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, பரந்துார் மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''குறைந்த அழுத்த மின்சார பிரச்னையை சரி செய்வதற்கு புதிய மின் மாற்றி அமைக்க அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. புதிய மின் மாற்றி அமைக்க ஒப்புதல் கிடைத்தவுடன், குறைந்த அழுத்த மின்சார வினியோகம் சரி செய்யப்படும்,'' என்றார்.

