/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைந்த மின் அழுத்த பிரச்னை தினமும் 10 முறை மின்வெட்டு
/
குறைந்த மின் அழுத்த பிரச்னை தினமும் 10 முறை மின்வெட்டு
குறைந்த மின் அழுத்த பிரச்னை தினமும் 10 முறை மின்வெட்டு
குறைந்த மின் அழுத்த பிரச்னை தினமும் 10 முறை மின்வெட்டு
ADDED : செப் 17, 2024 08:50 PM
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கூழாங்கல்சேரி வடக்கு, கூழாங்கல்சேரி தெற்கு, வசந்தம் டவுன்ஷிப், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் 450 மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த நிலையில், இப்பகுதிகளில், ஆறு மாதங்களுக்கு மேலாக பகலில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. தினமும் 10 முறைக்கு மேல் ஏற்படும் மின் தடையால், டிவி, கணினி, மின்விசிறி, மிக்சி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதாகின்றன.
மேலும், இரவு நேரங்களில் குறைந்த மின் அழுத்தம் வருவதால், வயதானோர், குழந்தைகள் கொசுக்கடி தொல்லையில் துாக்கமின்றி தவிக்கும் நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள், அப்பகுதியில் தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.