/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லுாகாஸ் டி.வி.எஸ்., கோப்பை அப்பல்லோ டயர்ஸ் வெற்றி
/
லுாகாஸ் டி.வி.எஸ்., கோப்பை அப்பல்லோ டயர்ஸ் வெற்றி
ADDED : ஜூன் 23, 2024 02:01 AM
சென்னை : திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 19வது லுாகாஸ் டி.வி.எஸ்., கோப்பைகான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. பட்டாபிராமில் உள்ள இந்துக் கல்லுாரியிலும், ஆவடி ஓ.சி.எப்., மைதானத்திலும் போட்டிகள் நடக்கின்றன.
இதில் மொத்தம் 10 அணிகள் 'ஏ' மற்றும் 'பி' பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் மற்றும் நாக் அவுட் முறையில் மோதுகின்றன.
அந்த வகையில் நேற்று, ஆவடி ஓ.சி.எப்., மைதானத்தில் நடந்த 'ஏ' பிரிவு முதல் போட்டியில், சென்னை பெட்ரோலியம் மற்றும் அசோக் லேலண்ட் எண்ணுார் அணிகள் எதிர்கொண்டன.
முதலில் பேட்டிங் செய்த சென்னை பெட்ரோலியம் அணி28.2 ஓவர்களில், அனைத்து விக்கெட் இழந்து 153 ரன்களை எடுத்தது.அடுத்து களமிறங்கிய அசோக் லேலண்ட் எண்ணுார் அணி 24.1 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 156 பெண்களை அடித்து வெற்றி பெற்றது.
தொடர்ந்து 'பி' பிரிவில் நடந்த போட்டியில், முதலில் ஆடிய ஓ.சி.எப்., அணி, 25 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 130 ரன்கள் அடித்தது.
அடுத்த பேட்டிங் செய்த அப்பல்லோ டயர்ஸ் அணி 16 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.