sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி அரசு ஊழியர் தம்பதியின் சொகுசு வீடுகள் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் அம்பலம்

/

காஞ்சி அரசு ஊழியர் தம்பதியின் சொகுசு வீடுகள் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் அம்பலம்

காஞ்சி அரசு ஊழியர் தம்பதியின் சொகுசு வீடுகள் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் அம்பலம்

காஞ்சி அரசு ஊழியர் தம்பதியின் சொகுசு வீடுகள் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் அம்பலம்


ADDED : ஆக 09, 2024 12:43 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சியில், நகரமைப்பு பிரிவில் கட்டட ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஷியாமளா, 47. இவர், காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது கட்டட அனுமதி பெறுவதற்கு அதிகளவில் கமிஷன் பெற்று வந்ததாக ஏராளமான புகார்கள் எழுந்தன.

இதனால், இரு ஆண்டுகளுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்து, திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சியில் கட்டட ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், காஞ்சிபுரத்தில் பணியாற்றிய காலத்தில், காஞ்சிபுரத்தில் அதிகளவு லஞ்சம் பெற்று சொத்துக்கள் வாங்கியதாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பல ஆண்டுகளாகவே, இவரது நடவடிக்கையை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இவரது கணவர் சேகர், 55, காஞ்சிபுரம் மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அரசு ஊழியர்களான கணவர், மனைவி பெயரில், பல்வேறு சொத்துக்கள் வாங்கியிருப்பது தெரியவந்ததால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரு நாட்கள் முன்பாக வழக்குப்பதிவு செய்து, கடந்த செவ்வாய்க்கிழமை, மண்டித்தெருவில் உள்ள இவரது வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில், ஆவணங்கள் மற்றும் 1.37 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

போலீஸ் தரப்பில் கூறியதாவது:

தொடர் விசாரணையில், வருமானத்திற்கு அதிகமாக, தம்பதியர் 73 லட்ச ரூபாய் அளவிற்கு அதிக சொத்துக்கள் சேர்த்திருப்பதாக, தெரிய வந்துள்ளது. மேலும், மகள் லண்டன் சென்று உயர் கல்வி படிப்பதாகவும், மகன் தனியார் கல்லுாரியில் பொறியியல் படிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இருவரும் பெற்றோரை சார்ந்து மட்டுமே இருந்துள்ளனர். ஷியாமளாவும், சேகரும் மட்டுமே குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபராக இருந்துள்ளனர்.

கடந்த 2003ல், ராஜகோபால் பூபதி தெருவில், ஷியாமளா பெயரில் 1,260 சதுர அடியில் இடத்தை வாங்கி வீடு ஒன்றை கட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து, அவரது வீட்டருகே 2012ல், அவரது கணவர் சேகர் பெயரில், 1,059 சதுர அடியில் ஒரு இடத்தை வாங்கி, 2019- - 20ல், ஆடம்பர பங்களா கட்டியுள்ளனர்.

மேலும், செவிலிமேடு நித்தியானந்தா நகரில், சேகர் பெயரில், 2006ல் ஏற்கனவே வாங்கப்பட்டிருந்த, 2,349 சதுர அடியில், ஏழு குடியிருப்புகளுடன், மூன்றடுக்கு வீட்டை, 2018- - 20 காலத்தில் கட்டியுள்ளனர். இதன் மதிப்பு, 94 லட்சம் ரூபாய்க்கு அதிகம்.. தனியார் நிறுவனத்திடம், சேகர், 58 லட்ச ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ஷியாமளா மற்றும் சேகர் ஆகியோரின் வருமானத்தைவிட, அவர்களின் சொத்து மதிப்பு 69 சதவீதம், கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

இருவரின் இந்த அதிகபடியான வருமானம், 2017- - 21 இடைபட்ட நான்கு ஆண்டுகளில், தாறுமாறாக உயர்ந்திருப்பது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us