/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்புகளின்றி மதுரமங்கலம் தரைப்பாலம்
/
தடுப்புகளின்றி மதுரமங்கலம் தரைப்பாலம்
ADDED : மே 26, 2024 03:02 PM

காஞ்சிபுரம்:வேலுார் மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாம்புரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது.
இந்த கால்வாய் வழியாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் வட்டங்களின், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம், 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த கால்வாய் குறுக்கே, கூரம், பெரியகரும்பூர், விஷகண்டிகுப்பம், சிறுவாக்கம், பரந்துார், கட்டுப்பட்டூர், தண்டலம், மதுமரங்கலம் உட்பட எட்டிற்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் செல்கின்றன.
இதில், மதுரமங்கலம் தரைப்பாலத்தின் இருபுறமும், தடுப்புகள் இல்லை. மேலும், ஒளிரும் பிரதிபலிப்பானும் இல்லை. இதனால், அந்த தரைப்பாலம் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளன.
எனவே, மதுரமங்கலம் தரைப்பாலத்தின் ஓரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விடாமல் இருக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

