/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மதுார் கூட்டுச்சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
/
மதுார் கூட்டுச்சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
மதுார் கூட்டுச்சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
மதுார் கூட்டுச்சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : செப் 16, 2024 06:26 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம்,திருமுக்கூடல்- - சாலவாக்கம் சாலையில், மதுார் கூட்டுச்சாலை உள்ளது. மதுார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், சிறுமை யிலூர் உள்ளிட்ட கிராமத் தினர், இச்சாலை வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மதுார் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து இயக்கப்படும் ஏராளமானலோடு வாகனங்கள், மதுார் கூட்டுச்சாலைவழியாக பல பகுதிகளுக்கு இரவு, பகலாக தொடர்ந்துஇயக்கப்படுகின்றன.
இதனால், இச்சாலை பகுதிகள் அடிக்கடிசேதமடைந்தும், அவ்வப்போது சீரமைத்தல்பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக மதுார் கூட்டுச்சாலை மற்றும் அருங்குன்றத்தில் இருந்து பழவேரிக்கு பிரியும் இணைப்புச் சாலை போன்ற பகுதிகளில், எப்போதும் சாலை சேதமடைந்தே காணப்படுகிறது.
இதனால், குண்டும், குழியுமான இச்சாலைபகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகின்றனர்
எனவே, மதுார் கூட்டுச்சாலை மற்றும் அருங்குன்றம் சாலை பகுதிகளில், சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்து தர வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.