/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமானுஜர் கோவிலில் மஹா., கவர்னர் தரிசனம்
/
ராமானுஜர் கோவிலில் மஹா., கவர்னர் தரிசனம்
ADDED : ஆக 11, 2024 02:28 AM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது.
வைணவ மகான் ராமானுஜர் அவதார தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து எராளாமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில், மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், நேற்று காலை ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலுக்கு வந்தார். கோவில் நிர்வாகம்சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப் பட்டது.
பின், கோவிலின் உள்ளே சென்று ராமானுஜர் சன்னிதி, பெருமாள் சன்னிதி, தாயார் சன்னிதியில் தரிசனம் செய்தார்.
ராமானுஜரின் திருவுருவப்படம் மற்றும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
அங்கிருந்த கோவில் யானைக்கு தர்பூசணி பழத்தை உணவாக வழங்கினார். அதன்பின், விநய ஆஞ்சநேய சன்னிதியில் தரிசனம் செய்தார்.

