/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி ஆதிகாமாட்சி கோவிலில் ஜூன் 12ல் மஹா கும்பாபிஷேகம்
/
காஞ்சி ஆதிகாமாட்சி கோவிலில் ஜூன் 12ல் மஹா கும்பாபிஷேகம்
காஞ்சி ஆதிகாமாட்சி கோவிலில் ஜூன் 12ல் மஹா கும்பாபிஷேகம்
காஞ்சி ஆதிகாமாட்சி கோவிலில் ஜூன் 12ல் மஹா கும்பாபிஷேகம்
ADDED : மே 30, 2024 10:11 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடாபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிக்காக, கடந்த 2022, செப்., 1ம் தேதி பாலாலயம் நடந்தது. தொடர்ந்து கோவில் உட்புறம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் கருங்கல் தரைதளம் அமைக்கப்பட்டு உள்ளது.
மஹா மண்டபத்தின் மேல்தளத்தில் ஓடுகள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி, ஜூன் 7ம் தேதி, மாலை 6:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, கோபூஜை, தீப சண்டி ஸப்த சதி பாராயணம் உள்ளிட்டவை நடக்கிறது.
ஜூன் 9ம் தேதி, மாலை 4:00 மணிக்கு முதற்கால யாகபூஜை துவங்குகிறது. ஜூன் 12ம் தேதி காலை 4:00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜையும், காலை 6:00 மணிக்கு கலச புறப்பாடும், 6:30 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து பரிவார சன்னிதி, மூலவர் அம்பாள், ஆதிகாமாட்சிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:30 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் ஆதிகாமாட்சியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடும் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி ஜூன் 7ம் தேதி முதல், 13ம் தேதி வரை தினமும் இரவு 7:00 மணிக்கு மங்கல இசை, பரதநாட்டியம், வயலின், வீணை இசை, பக்தி நாட்டிய நிகழ்ச்சி, பக்தி இன்னிசை உள்ளிட்டவை நடக்கிறது.