/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எடமச்சி அம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
/
எடமச்சி அம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 08, 2024 11:13 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில், எல்லையம்மன் கோவில் உள்ளது.
சிறிய வடிவிலாக இருந்த இக்கோவிலை புதிய வடிவில் புனரமைக்கஅப்பகுதியினர் தீர்மானித்தனர்.
அதன்படி, எடமச்சி மலை அருகே உள்ளஅம்புலி குன்றின் மீது மண்டபத்துடன் கூடிய கோபுர வடிவிலான கோவில்கட்டுமான பணி, 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது.
தற்போது பணி முழுமையாக நிறைவுபெற்றதையடுத்து, இன்று மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் யாகசாலைபூஜைகளும் நேற்றுவிநாயகர் பூஜை, மண்டபபூஜை, வேத பாராயணம் மற்றும் தீபாரதனைநடந்தது.
இன்று காலை, கோவில் கோபுர விமான கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.