/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விளக்கொளி பெருமாள் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
/
விளக்கொளி பெருமாள் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
விளக்கொளி பெருமாள் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
விளக்கொளி பெருமாள் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 06, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகில், விளக்கொளி பெருமாள், துாப்புல் வேதாந்த தேசிகன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறையால், முடிவு செய்யப்பட்டு, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நாளை, காலை 5.30 மணி முதல், 6.30 மணிக்குள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்படுகிறது.
காலை 8:30 மணிக்கு சர்வ தரிசனமும், மாலை 5:00 மணிக்கு உற்சவர் புறப்பாடும் நடைபெறுகிறது.