/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
/
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஆக 24, 2024 12:40 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அம்மையப்பநல்லூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், சிதிலமான பகுதிகளை சீர் செய்து புனரமைப்பு பணி மேற்கொள்ள அப்பகுதியினர் தீர்மானித்தனர்.
அதன்படி, நன்கொடை வசூல் வாயிலாக, சில மாதங்களாக திருப்பணி நடைபெற்றது. பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று, மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
விழாவை முன்னிட்டு, இரண்டு நாட்களாக கணபதி ஹோமம், திருவாராதனம், வாஸ்து ஹோமம், விஸ்வரூபம், கோ பூஜை, அக்னி ப்ரணயனம், பூரணாஹூதி உள்ளிட்ட யாக கால பூஜைகள் நடந்தன.
நேற்று, காலை 8:00 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசம் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து, ஆதிகேசவ பெருமாள் கோவில் விமான கோபுரத்தில் பூஜிக்கப்பட்ட கலசம் மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில், அம்மையப்பநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

