/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விளக்கொளி பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
/
விளக்கொளி பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
விளக்கொளி பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
விளக்கொளி பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 09, 2024 04:17 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகில், விளக்கொளி பெருமாள், துாப்புல் வேதாந்த தேசிகன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறையால் முடிவு செய்யப்பட்டு, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 5:30 மணிக்கு வேத விற்பன்னர்கள் கோவில் ராஜகோபுர கலசத்திற்கும், பிற சன்னிதி கோபுரத்திற்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவையொட்டி ரங்கசாமிகுளம் பகுதியில் இருந்து, விளக்கடிகோவில் தெரு வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.