/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரியின் பராமரிப்பு படுமோசம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
/
ஏரியின் பராமரிப்பு படுமோசம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
ஏரியின் பராமரிப்பு படுமோசம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
ஏரியின் பராமரிப்பு படுமோசம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
ADDED : ஆக 22, 2024 01:48 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை ஒட்டி பொன்னேரி அமைந்துள்ளது. இப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக விளங்கும் இந்த ஏரி நீரை பயன் படுத்தி, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் செய்து வந்தனர்.
விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிய தால், ஏரி நீரைவிவசாயத்திற்கு பயன்படுத்துவது வெகுவாக குறைந்துவிட்டது.
இந்நிலையில், பொன் னேரியை முறையாக பராமரிக்காததால் ஏரிக்குள் கருவேல மரங்கள், கடற்பாலை செடிகளும், வெங்காய தாமரை செடிகளும் புதர்போல மண்டியுள்ளதால், ஏரி நீர்பிடிப்பு பகுதி வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், மழைக்காலத்தில் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக பணியாளர் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சென்று விடுகிறது.
எனவே, பொன்னேரி ஏரியில் காடுபோல வளர்ந்துள்ள கருவேல மரங்கள், கடற்பாலை செடிகள், வெங்காய தாமரைசெடிகளை அகற்றி, துார்வாரி ஏரியை சீரமைக்க நீர்வள ஆதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.