/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாவலுார் கல்லுக்குட்டை பராமரிப்பு படுமோசம்
/
நாவலுார் கல்லுக்குட்டை பராமரிப்பு படுமோசம்
ADDED : ஆக 12, 2024 04:39 AM

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலுார் கிராமம், பஜனை கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்குள்ள பெருமாள் கோவிலின் பின்புறம் கல்லுக்குட்டை உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன், இக்குட்டை அப்பகுதியின் முக்கிய நீராதாரமாக இருந்தது.
கடந்த 5 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால், அப்பகுதியினர் இந்த குட்டையில் குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால், குளத்தின் நீர் மாசடைந்து வருவதோடு, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
கோவில் அருகே உள்ள குட்டையில் குப்பை கொட்டுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது, குட்டையில் தண்ணீர் முழுதும் நிரம்பியுள்ள நிலையிலும், அதை பயன்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குளத்தில் உள்ள மாசடைந்த நீரை மோட்டார் வாயிலாக அகற்றி, துார் வாரி சீரமைத்து, குப்பை கொட்டுவதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.