/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நண்பரை பீர்பாட்டிலால் குத்தியவர் சிக்கினார்
/
நண்பரை பீர்பாட்டிலால் குத்தியவர் சிக்கினார்
ADDED : ஜூலை 31, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, : வேளச்சேரி, ஜெகன்னாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோ, 44, பாபு, 49; இருவரும் நண்பர்கள். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி பிரதான சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
போதை தலைக்கேறியதும், பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாபு, பீர் பாட்டிலை உடைத்து இளங்கோவின் கழுத்தில் குத்தி தப்பி ஓடினார். பலத்த காயம் அடைந்த இளங்கோ, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வேளச்சேரி போலீசார், நேற்று பாபுவை கைது செய்தனர்.