/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விமான நிலையத்தில் மயங்கி விழுந்தவர் மரணம்
/
விமான நிலையத்தில் மயங்கி விழுந்தவர் மரணம்
ADDED : மே 08, 2024 11:57 PM
சென்னை:சென்னை விமான நிலைய சர்வதேச கார்கோ பிரிவில், அலுவலகப் பணியாக வந்திருந்த தனியார் நிறுவன ஊழியர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை கிழக்கு தாம்பரம், மணிமேகலை தெருவில் வசித்து வந்தவர் சங்கரநாராயணன், 54. இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அலுவலகப் பணி காரணமாக, நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலைய சர்வதேச கார்கோ பிரிவிற்கு சங்கரநாராயணன் வந்துள்ளார். இரவு 10:30 மணி அளவில், அங்கு திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
விமான நிலைய கார்கோவில் பணியில் இருந்த ஊழியர்கள், உடனடியாக சங்கரநாராயணனை, சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சங்கரநாராயணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். அவருக்கு திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விமான நிலைய போலீஸார் அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.