ADDED : ஜூலை 11, 2024 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், மாணிக்கவாசகர் குரு பூஜை விழா, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மாலை 6:00 மணிக்கு மாணிக்கவாசக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, மஹா தீபாராதனை, மலர் அலங்காரம் நடந்தது.
காஞ்சி சிவனடியார் திருக்கூட்ட ஓதுவாமூர்த்திகள் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்ற திருவாசகம் பாராயணம் நடந்தது. இதில், காஞ்சி சிவனடியார் திருக்கூட்ட தலைவர், செயலர் உள்ளிட்ட நிர்வாகஸ்தர்கள் பங்கேற்றனர்.