ADDED : மார் 02, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,மொரீசியஸ் நாட்டிலிருந்து சென்னைக்கு, சனிக்கிழமை அதிகாலை 1:50 மணிக்கு, ஏர் மொரிசியஸ் விமானம் வந்து, அதிகாலை 3:35 மணிக்கு மொரீசியஸ் புறப்படுவது வழக்கம். வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்படுவதால், பயணியர் அதிகளவில் இந்த விமானத்தில் பயணம் செய்வர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை விமானத்தில் செல்வதற்கு, 255 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால், விமானம் சென்னைக்கு வரவில்லை. மொரீசியஸ் நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விமானம் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
விமானம் இன்று அதிகாலை புறப்பட்டு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில பயணியருக்கு ரத்து அறிவிப்பு கிடைத்துள்ளது. ஆனால், சில பயணியருக்கு வரவில்லை. இதனால், சிலர் விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர்.