/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருக்காலிமேடில் மருத்துவ முகாம்
/
திருக்காலிமேடில் மருத்துவ முகாம்
ADDED : ஆக 09, 2024 12:32 AM

காஞ்சிபுரம்,:பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய சளி, இருமல், சாதாரண காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, மாநகராட்சி வார்டுகளில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் நத்தப்பேட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், திருக்காலிமேடில் நேற்று சுகாதார ஆய்வாளர் ரோஹித் குமார் தலைமையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
இதில், மருத்துவ குழுவினர் பகுதிவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து நோயின் தன்மைக்கேற்ப மருந்து, மாத்திரை வழங்கினர்.
முன்னதாக துாய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு,டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது.