/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடம் சிப்காட் சாலையில் தெரு நாய்களால் அச்சுறுத்தல்
/
ஒரகடம் சிப்காட் சாலையில் தெரு நாய்களால் அச்சுறுத்தல்
ஒரகடம் சிப்காட் சாலையில் தெரு நாய்களால் அச்சுறுத்தல்
ஒரகடம் சிப்காட் சாலையில் தெரு நாய்களால் அச்சுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2024 12:11 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் சிப்காட் சாலைகளில் கூட்டம் கூட்டமாக திரியும் தெருநாய்கள், சாலையில் நடந்து செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம்,படப்பை அடுத்த, ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 180க்கும் அதிகமான தொழிற்சாலைகளில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியான வைப்பூர், எறையூர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில், வெளிமாவட்ட மற்றும் மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.
அவ்வாறு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும்பாலும், கிருஷ்ணா கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, சிப்காட் சாலை வழியே நடந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கூட்டம் கூட்டமாக திரியும் தெருநாய்கள், சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி வருகின்றன. நாய்கள் கடிக்கும் அச்சத்தில் ஓடுகின்றனர்.
குறிப்பாக, பெண்கள், வயதானோர் தெருநாய்களின் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:
தொழிற்சாலைகளில் மீதமாகும் உணவு கழிவு, சிப்காட் சாலையோர கால்வாயில் கொட்டப்படுகிறது. அதை உண்ணும் நாய்கள், அங்கேயே சிப்காட் சாலையில் திரிகின்றன.
சில சமயம் கூட்டமாக சாலைகளில் வலம் வரும் இவை, சாலைகளில் நடந்து செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்க முற்படுகின்றன.
எனவே, உணவு கழிவுகளை, சிப்காட் சாலைகளில் கொட்டுவதை தடுத்து, சாலையில் அச்சுறுத்தும் நாய்களை பிடிக்க சிப்காட் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.