/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மன வளர்ச்சி குன்றியோர் நீச்சல் எஸ்.டி.ஏ.டி., அணி 'சாம்பியன்'
/
மன வளர்ச்சி குன்றியோர் நீச்சல் எஸ்.டி.ஏ.டி., அணி 'சாம்பியன்'
மன வளர்ச்சி குன்றியோர் நீச்சல் எஸ்.டி.ஏ.டி., அணி 'சாம்பியன்'
மன வளர்ச்சி குன்றியோர் நீச்சல் எஸ்.டி.ஏ.டி., அணி 'சாம்பியன்'
ADDED : ஜூலை 15, 2024 06:16 AM

சென்னை : தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் எனும் எஸ்.டி.ஏ.டி., சார்பில், இந்தியாவிலேயே முதன்முறையாக மனவளர்ச்சி குன்றியோருக்கான மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை, வேளச்சேரியில் நேற்று நடந்தது.
இதில் 8 முதல் 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான 50 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் கணேஷ் முதலிடமும், ஹிருதய் மூன்றாவது இடமும் பிடித்தனர்.
இவர்கள் இருவரும், பள்ளிக்கரணை யாதவி ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெறுகின்றனர். எஸ்.டி.ஏ.டி., சென்னை அணி வீரர் சித்தார்த் இரண்டாவது இடம் பிடித்தார்.
அனைத்து பிரிவு போட்டிகள் முடிவில் எஸ்.டி.ஏ.டி., சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இரண்டாவது இடத்தை, யாதவி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி கைப்பற்றியது.
பரிசளிப்பு விழாவில், இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெயபிரகாஷ் பங்கேற்று, பரிசுகளை வழங்கினார்.
விழாவில், ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் அமைப்பின் வட்டார விளையாட்டு இயக்குனர் நாகராஜன், தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க தலைவர் திருமாறன், செயலர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.