/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மெட்ரோ, மாநகர பஸ், மின்சார ரயில் 'ஒரே டிக்கெட்' திட்டம் ஜூனில் அமல்?
/
மெட்ரோ, மாநகர பஸ், மின்சார ரயில் 'ஒரே டிக்கெட்' திட்டம் ஜூனில் அமல்?
மெட்ரோ, மாநகர பஸ், மின்சார ரயில் 'ஒரே டிக்கெட்' திட்டம் ஜூனில் அமல்?
மெட்ரோ, மாநகர பஸ், மின்சார ரயில் 'ஒரே டிக்கெட்' திட்டம் ஜூனில் அமல்?
ADDED : மே 13, 2024 02:34 AM

சென்னை : 'மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயிலில், ஒரே டிக்கெட்டில் பயணம் செய்வதற்கான, 'டெண்டர்' தொடர்பாக, ஜூனில் முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் மெட்ரோ ரயில், மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், வெவ்வேறு கட்டண முறை மற்றும் டிக்கெட் வழங்கும் முறை அமலில் உள்ளன.
ஒரு நபர் அடுத்தடுத்து இந்த சேவைகளை பயன்படுத்தும்போது, இந்த வேறுபட்ட டிக்கெட் முறையால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்காக ஒருங்கிணைந்த முறையில், ஒரே டிக்கெட் என்ற நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமமான 'கும்டா' இதற்கான நடவடிக்கைகளை துவக்கியது.சென்னையில் பல்வேறு போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த பொதுவான, க்யூ.ஆர்., குறியீடு வாயிலாக டிக்கெட் வழங்கும் முறையை அமல்படுத்த, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான சாத்தியக்கூறுகள் தனியார் கலந்தாலோசகர் வாயிலாக பெறப்பட்டது.
இதையடுத்து, பொதுவான டிக்கெட் முறைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்க டெண்டர் கோரப்பட்டது. இதில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், எந்த நிறுவனத்தின் தொழில்நுட்பம் ஏற்றது என்பதை முடிவு செய்வதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இறுதி முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளதாக கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் 4ல் தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஒரே டிக்கெட் திட்டம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த டிக்கெட் முறை நடைமுறைக்கு வந்தால், பயணியர் மொபைல்போன் வாயிலாக க்யூ.ஆர்., குறியீட்டை பயன்படுத்தி, பல்வேறு போக்குவரத்து சேவைகளுக்கான டிக்கெட்களை எளிதில் பெறும் நிலை ஏற்படும்.