/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெருநகர் களரொளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
/
பெருநகர் களரொளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
பெருநகர் களரொளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
பெருநகர் களரொளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
ADDED : ஜூலை 22, 2024 05:50 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, பெருநகரில் உள்ள களரொளியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான ஆடி மாத தேர் திருவிழா, கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று முன்தினம், மதியம் 12:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, அம்மன் குடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
நேற்று, காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும், 11:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. மதியம் 2:00 மணிக்கு மலரால் அலங்கரிக்கப்பட்ட களரொளியம்மன் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
அப்போது பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், தேர் இழுத்தும் முதுகில் முள்போட்டு ஆகாயத்தில் தொங்கியபடியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். தேரில் வீதியுலா வந்த அம்மனை அப்பகுதியினர் தீபம் ஏற்றி வழிபட்டனர்.